Home இலங்கை சமூகம் மந்துவில் படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மந்துவில் படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல்

0

முல்லைத்தீவு (Mullaitivu) – புதுக்குடியிருப்பு மந்துவில் படுகொலையின் 26ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியன்று மந்துவில்
சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் 26ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

உணர்வெழுச்சியுடன் அஞ்சலி 

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து படுகொலைச்
சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு,
உயிர்நீத்தவர்களின் உறவுகள் மலர் மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி,
கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன், கரைதுறைப்பற்று
பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட் பிரசாத், முன்னாள் பிரதேச சபை
உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், படுகொலைச் சம்பவத்தின்போது
உயிர்நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version