Home இலங்கை குற்றம் மூன்று மாதங்களுக்குள் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! பலர் பலி

மூன்று மாதங்களுக்குள் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! பலர் பலி

0

கடந்த மூன்று மாதங்களுக்குள் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக 22 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 01ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதிக்குள் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதன் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு

இவ்வாறான சம்பவங்களில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மாத்திரமன்றி, எதுவித குற்றங்களுடனும் தொடர்பில்லாத அப்பாவிகள் பலரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version