Home இலங்கை சமூகம் திட்வா புயலால் 275,000 குழந்தைகள் பாதிப்பு

திட்வா புயலால் 275,000 குழந்தைகள் பாதிப்பு

0

“திட்வா” (Ditwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கையில் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய இலங்கைக்கான பிரதிநிதி (Emma Brigham) தெரிவித்துள்ளார்.

யூனிசெஃப் மேற்கொண்ட ஆரம்ப மதிப்பீட்டின் போதே இந்தக் தரவுகள் வெளியாகியுள்ளன.

அதிகரிக்க வாய்ப்பு 

இருப்பினும், பல பகுதிகளில் இன்னும் சாலை மற்றும் தகவல் தொடர்பு தடைகள் நிலவுவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று (Emma Brigham) குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூறாவளியால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டுள்ளமை குறித்து யூனிசெஃப் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version