2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 2771 இலங்கையர்கள்(sri lanka) இஸ்ரேலில்(israel) வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தாதியர், விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய மூன்று துறைகளிலும் இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைகளைப் பெற முடியும்.
பல்வேறு தொழிலுக்கு
அதன்படி, தாதியர் தொழிலுக்கு 409 பேரும், கட்டுமானத் துறைக்கு 804 பேரும், விவசாயத் துறைக்கு 1558 பேரும் சென்றுள்ளனர்.
மேலும், மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் மேலும் 172 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைக்காகச் செல்ல உள்ளனர்.
சங்கக்காரவின் நெருங்கிய உறவினரின் வீடு தீப்பற்றி எரிந்து நாசம்
அதிகரித்த இலங்கையர்கள்
2023 ஆம் ஆண்டில் 1,912 இலங்கையர்கள் மாத்திரமே இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.
பணியகத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு இஸ்ரேலுக்கு வேலைக்கு செல்லும் இலங்கையர்களின் பெரும் வளர்ச்சியைக் காட்டுகிறது.
உடலிற்கு வலிமையை தரும் கஞ்சாவை சட்டமாக்குங்கள் : அரசிடம் தேரர் வலியுறுத்து
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |