50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 1,373 கிலோ மஞ்சளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (10) இடம்பெற்றுள்ளது.
பள்ளிவாசல் பாடுவ கடற்பரப்பில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் மஞ்சள் கையிருப்பையும் புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட இந்த மஞ்சள் சரக்கு பள்ளிவாசல் பாடுவ கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளது.
லொறிகள் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல தயாராகி வந்ததாக கூறப்படுவதுடன் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட தம்பபன்னி கடற்படை முகாமின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.