ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து (UAE) வந்த இரண்டாவது மனிதாபிமான விமானம் இன்று கட்டநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
முதல் தொகுதி நிவாரணப்பொதிகள் வந்து ஒரு சில நாட்களுக்கு மற்றுமொரு நிவாரண தொகுதி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பொருள் தொகுதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பாதுகாப்புப் பெட்டிகள் மற்றும் கூடாரங்கள் உள்ளிட்ட அவசரமாகத் தேவையான பொருட்களைக் கொண்டுள்ளது, இது கஷ்டங்களை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு நம்பிக்கையையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்க உதவுகிறது.
