மட்டக்களப்பில் (Batticaloa) சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (08) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த மூவரும், மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விரைந்த காவல்துறை
இதையடுத்து, நடவடிக்கை குறித்து ஏறாவூர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்ததுடன் 151 சுவரொட்டிகளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
