கண்டியில் வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (19) கண்டி உடுதும்பர-மீமுரே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் மற்றும் ஆண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
