Home இலங்கை சமூகம் வருடாந்தம் 3 இலட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவு

வருடாந்தம் 3 இலட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவு

0

ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகி வருவதாக பொது சுகாதார கால்நடை வைத்திய சேவை (Public Health Veterinary Service) தெரிவித்துள்ளது.

இதில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் மனித விசர்நாய்க்கடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுத்தர வயதுடையவர்கள் அதிகம்

கடந்த வருடம் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார கால்நடை சுகாதார சேவையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார்.

இதில், நடுத்தர வயதுடையவர்கள் அதிகமாக விலங்கு கடிக்கு உள்ளாவதாகவும், அவர்களில் 2 பேரில் ஒருவர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நாய்க்கடி அதிகமாகப் பதிவாகியிருந்தாலும், கடந்த பத்து வருடங்களில் படிப்படியாகக் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விசர் நாய்க்கடி தடுப்பூசிகளுக்காக வருடாந்தம் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாக வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version