Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று பேர் அதிரடியாக கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று பேர் அதிரடியாக கைது

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை சுங்கத்தை சேர்ந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவால் செய்யப்பட்டது.

போதைப்பொருள்

இலங்கைப் பிரஜைகளான 3 சந்தேக நபர்களும், தங்கள் பைகளில் போதைப்பொருட்களை கவனமாக மறைத்து பேங்கொக்கிலிருந்து நாட்டிற்கு கொண்டு வந்திருந்தனர்.

அவர்களின் பொதிகளில் 1,616 கிராம் குஷ் மற்றும் 1,762 கிராம் ஹஷிஷ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

மேலதிக விசாரணை

இந்த போதைப்பொருட்களின் மதிப்பு 45 மில்லியன் ரூபாய்  என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூன்று சந்தேக நபர்களில் இருவர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள், மற்றைய சந்தேக நபர் பதுளை பகுதியைச் சேர்ந்தவராகும்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Source: https://tamilwin.com/article/3-persons-arrested-in-katunayake-airport-today-1744624930

NO COMMENTS

Exit mobile version