Home இலங்கை குற்றம் இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் இந்தியக் கடற்பரப்பில் கைது

இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் இந்தியக் கடற்பரப்பில் கைது

0

இந்தியாவின் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த
இலங்கை பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை கடற்றொழிலாளர்களையும் இந்தியக்
கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று(16.09.2024) இடம்பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை

இந்திய எல்லைக்குள் இயந்திரக் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த மூவரே கைது
செய்யப்பட்டு மண்டபம் முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்திய கடற்படையின் மண்டபம் முகாமில் முழுமையான விசாரணைக்குப்
பின்னர் மேற்படி, கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்தியக்
கடற்பகுதிக்கு வந்தார்களா அல்லது எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டார்களா
எனக் கண்டறிந்த பின்னர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version