Home இலங்கை சமூகம் யாழில் பாரிய விபத்து : இரண்டு பேருந்துகளுக்கிடையில் சிக்கிய முச்சக்கர வண்டி

யாழில் பாரிய விபத்து : இரண்டு பேருந்துகளுக்கிடையில் சிக்கிய முச்சக்கர வண்டி

0

யாழ்ப்பாணம் (Jaffna) – ஆரியகுளம் பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

ஆரியகுளம் – தொடருந்து தண்டவாளம் பகுதியில் இன்று (26) காலை 10.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று வாகனங்கள் விபத்து 

இதன்போது வயாவிளானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பேருந்து, தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி ஆகியனவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

மூன்று வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்டவேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு பேருந்துகளுக்குமிடையில் முச்சக்கரவண்டி சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/3-vehicles-accident-in-jaffna-aariyakulam-1724649237

NO COMMENTS

Exit mobile version