Home இலங்கை சமூகம் சீரற்ற காலநிலை : ஒலுவில் பகுதியில் உடைந்து விழுந்த பாலம்

சீரற்ற காலநிலை : ஒலுவில் பகுதியில் உடைந்து விழுந்த பாலம்

0

அம்பாறை (Amparaமாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று – கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக வடக்கு , கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று (27.11.2024) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளது.

வெள்ள நீரோட்டம்

வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும், காவல்துறையினரும் அப்பகுதியினால் செல்லும் மக்களை விழிப்பூட்டிவருவதுடன் குறித்த பாலத்தினை கடக்கும் மக்களுக்கு உதவியும் வருகின்றனர்.

இந்த பாலம் உடைந்துள்ளதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version