Home இலங்கை குற்றம் செவ்வந்தியின் மறைவிடம் தொடர்பில் வெளியான தகவல்! மூவர் கைது

செவ்வந்தியின் மறைவிடம் தொடர்பில் வெளியான தகவல்! மூவர் கைது

0

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி, தெபுவன ரன்னகல தோட்டத்திலுள்ள வீடொன்றில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சோதனை நடவடிக்கை நேற்றையதினம்(24.02.2025) மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தெபுவன பொலிஸாரினால் குறித்த வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முழுமையான சோதனை

தொடர்ந்து, இன்றையதினம்(25) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் இராணுவம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழுமையான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான செவ்வந்தி, இரண்டு வாரங்களுக்கு முன்னர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இருந்து தெபுவன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்துகம, ரன்னகல பிரதேசத்தில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றதாக தகவல் வெளியானது.

இதனையடுத்தே, நேற்றையதினம் பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

You May Like This..

NO COMMENTS

Exit mobile version