Home இலங்கை சமூகம் யாழில் அத்துமீறிய 30 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்!

யாழில் அத்துமீறிய 30 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்!

0

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய கடற்றொழிலாளர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் அண்மையில் நான்கு இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

விளக்கமறியல்

இந்தநிலையில், குறித்த இந்திய கடற்றொழிலாளர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, 30 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகம் மற்றும் கடற்படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version