பெலியத்த (Beliatta) காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹெட்டியாராச்சி வளைவு பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (29) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர் விசாரணை
தனியார் பேருந்து ஒன்றும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதாலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பெலியத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
