Home இலங்கை அரசியல் ரணிலுக்காக 300 சட்டத்தரணிகள் முன்னிலை!

ரணிலுக்காக 300 சட்டத்தரணிகள் முன்னிலை!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் சுமார் 300 சட்டத்தரணிகள் முன்னிலையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல், எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

எதிர்க்கட்சியினருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு 

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சி கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர், இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனுடன், எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து வழக்கறிஞர் குழுக்களும், மேற்கு மாகாண அமைப்பாளர்களும் நீதிமன்றத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

  

இந்நிலையில், பொதுமக்கள் அமைதியைப் பேணும் நோக்கில், இன்று (ஆகஸ்ட் 26) கோட்டை நீதிமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு, இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.  

NO COMMENTS

Exit mobile version