Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் கரட்டின் விலை! கொழும்பில் 3000 ரூபா, நுவரெலியாவில் 190 ரூபா

இலங்கையில் கரட்டின் விலை! கொழும்பில் 3000 ரூபா, நுவரெலியாவில் 190 ரூபா

0

இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குறைவான விலையில் மரக்கறிகளை பெற்று, கொழும்பில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதற்கமைய நுவரெலியாவில் 190 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் கரட், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒரு கிலோ கரட் 2900-3000 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து நேற்று கொழும்புக்கு ஏராளமான மரக்கறிகள் அனுப்பப்பட்டுள்ளன.

கரட்டின் விலை

எனினும் கொழும்பில் அது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொருளாதார நிலைய மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபா, கரட் 190 ரூபா, லீக்ஸ் 190 ரூபா, முள்ளங்கி 160 ரூபா, பீட்ரூட் 230 ரூபா, உருளைக்கிழங்கு 260 ரூபா, சிவப்பு உருளைக்கிழங்கு 280 ரூபா விலையிலும் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதுடன் சீன உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் மரக்கறிகள் உட்பட 73,000 கிலோ காய்கறிகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version