Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு துறைமுகத்தில் 13,000 கொள்கலன்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கொழும்பு துறைமுகத்தில் 13,000 கொள்கலன்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

0

கொழும்பு துறைமுகத்தில் 13,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக உயர்மட்டக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக அமைச்சர், பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர், சுங்கத்தின் பிரதான அதிகாரிகளுடன் நேற்று இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.இந்த கூட்டத்திலே 13,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள நெருக்கடி

புதிதாக கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை மேலதிக சுங்க ஆய்வு மையமாக மாற்ற வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.

அரசு நிறுவனங்களின் ஒப்புதல் தேவைப்படும் கொள்கலன்களை புதிய யார்டில் நிறுத்தி வைக்கலாம் என சுங்க இயக்குநர் ஜெனரலும் தெரிவித்திருந்தார்.

டெலிவரி ஆர்டர் தாமதங்கள் மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் கொள்கலன் இயக்க அறிவிப்புகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளிட்ட பல செயல்பாட்டு சிக்கல்கள் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

NO COMMENTS

Exit mobile version