Home இலங்கை பொருளாதாரம் உலக சந்தையில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்க விலை!

உலக சந்தையில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்க விலை!

0

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று (23.12.2025) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன் முறையாக 4,485 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

தங்க விலை 

அதனைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலையானது கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினத்துடன் (22.12.2025) ஒப்பிடுகையில் இன்று (23.12.2025) நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 7,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று (23.12.2025) காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 325,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று (22.12.2025) 344,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 352,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version