Home இலங்கை சமூகம் காவல்நிலையத்தில் வெடித்த துப்பாக்கி: அதிகாரியொருவர் வைத்தியசாலையில்.!

காவல்நிலையத்தில் வெடித்த துப்பாக்கி: அதிகாரியொருவர் வைத்தியசாலையில்.!

0

அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் இன்று (24) மதியம் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் ஒரு காவல் அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த அதிகாரி பணிக்கு சமூகமளிக்க வந்த ஒரு கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகிறது.

கான்ஸ்டபிள் பணிக்கு சமூகமளித்த பின்னர் தனது துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, ​​திடீரென துப்பாக்கி வெடித்ததாக கூறப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதி

அதன்போது, அவரது காலில் குண்டு பாய்ந்த நிலையில், உடனடியாக அவர் பலபிட்டிய ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரது நிலை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version