Home இலங்கை சமூகம் பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை! அம்பலப்படுத்திய தேரர்

பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை! அம்பலப்படுத்திய தேரர்

0

தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தற்போது அமைந்துள்ள காணியானது காங்கேசன்துறையிலுள்ள பொதுமக்களின் காணிகள் என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்தார்.

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் காணொளியொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த உண்மையினை நாட்டிலுள்ள பெரும்பான்மை பெளத்த சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனுமதியற்ற கட்டடம்

மேலும் கருத்து தெரிவித்த அவர், “போர் காாலத்தில் சிவில் மக்களுக்கு சொந்தமான நிலங்களை கைப்பற்றி, அனுமதியின்றி கட்டப்பட்ட இடமே இந்த திஸ்ஸ விகாரை எனப்படும் போலி திஸ்ஸ விகாரையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

எனவே, இந்த விடயத்தில் யாரும் கலவரமடைய வேண்டாம்.

இந்த தமிழ் மக்கள் இதுவரை அமைதியாகவே நான் பார்த்திருக்கிறேன்.       

எனவே, அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் அவமதிப்பாகவே நான் பார்க்கிறேன்” என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/tU0PBQtNrxg

NO COMMENTS

Exit mobile version