Home இலங்கை குற்றம் நாட்டில் ஏற்பட்டுள்ள பேரனர்த்தம் – கொழும்பில் உல்லாச விருந்தில் இளைஞர், யுவதிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரனர்த்தம் – கொழும்பில் உல்லாச விருந்தில் இளைஞர், யுவதிகள்

0

நாடு பேரிடரில் சிக்கித் தவித்து வரும் நிலையில் உல்லாச விருந்து வைத்து இளைஞர் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, வெலிக்கடை பகுதியில் பேஸ்புக் விருந்தொன்றை முற்றுகையிட்டு இரண்டு பெண்களையும் 32 ஆண்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


களியாட்ட விருது

நியூ ஜெயவீர மாவத்தையில் நடந்த விருந்தில் சோதனை நடத்திய பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில் ஹெராயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட ஏராளமான போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு உட்பட நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும், பலர் காணாமலும் போயுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இப்படியான களியாட்ட விருது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version