Home இலங்கை அரசியல் நிவாரணப்பொருட்கள் மற்றும் மீட்பு குழுக்களுடன் மற்றுமொரு இந்திய விமானம் தரையிறங்கியது

நிவாரணப்பொருட்கள் மற்றும் மீட்பு குழுக்களுடன் மற்றுமொரு இந்திய விமானம் தரையிறங்கியது

0

 இலங்கையில் ஏற்பட்டுள்ள டித்வா புயலின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மற்றுமொரு நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு படையினர் அடங்கிய இந்திய விமானம் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

9 தொன் நிவாரணப் பொருட்கள்,80 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களைக் கொண்ட 2 நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் வந்துள்ளன.

27 தொன் நிவாரணப் பொருட்கள்

வானம் மற்றும் கடல் வழியாக மொத்தம் சுமார் 27 தொன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்னும் பல வந்து கொண்டிருக்கின்றன!என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே 80 பேரடங்கிய மீட்புக்குழுவினர்

இதேவேளை ஏற்கனவே 80 பேரடங்கிய மீட்புக்குழுவினர் இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version