Home இலங்கை சமூகம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் மக்களினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் மக்களினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

0

கடந்த ஆண்டில் மட்டும் நாட்டில் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மலேரியா தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.

மலேரியா தொடர்பான தகவல்கள்

மேலும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் மக்களிடமிருந்து இந்த நோய் பதிவாகி வருவதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு  நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேரியா தொடர்பான தகவல்களை 071 284 1767 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் பெறலாம் என்று தேசிய மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் இந்தீவரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version