1990 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதத்தில் தீவகத்தில் ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை(26.08.2025 ) உறவுகளால் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஊர்காவற்துறையில் பிற்பகல் 2.00 மணிக்கும்
அராலிச்சந்தியில் பிற்பகல் 3.30 மணிக்கும்
மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்தில் பிற்பகல்4.30 மணிக்கும்
மற்றும்
மண்டைதீவு பிரதான நிகழ்வு மாலை 6.00 மணிக்கும் இடம்பெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டு அஞ்சலி
இந்த நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டு அவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினர்.
1990 ஆம் ஆண்டு தீவக பகுதியை முழுமையாக கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையின்போது இந்த அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.
