Home இலங்கை குற்றம் இந்த வருடத்தில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! 26 உயிரிழப்புகள்

இந்த வருடத்தில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! 26 உயிரிழப்புகள்

0

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த 112 நாட்களில் நடைபெற்ற 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 23 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக்கும்பல்களின் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு

ஏனைய 14 சம்பவங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://tamilwin.com/article/37-shooting-incidents-26-people-killed-in-sl-1745405918

NO COMMENTS

Exit mobile version