Home இலங்கை குற்றம் சுட்டுக்கொல்லப்பட்ட டான் பிரியசாத் – கொந்தளிக்கும் மகிந்த கட்சி

சுட்டுக்கொல்லப்பட்ட டான் பிரியசாத் – கொந்தளிக்கும் மகிந்த கட்சி

0

கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவிருந்த டான் பிரியசாத் சுட்டுக்கொலைப்பட்டமைக்கு அந்த கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது மிகவும் கவலை தரும் அரசியல் ரீதியான கொலை என கட்சியின் பேச்சாளர் மனோஜ் கமகே கடுமையாக கண்டித்துள்ளார்.

பிரியசாத்தின் துணிச்சலான அரசியல் கருத்துகளே இந்தப் படுகொலையின் காரணமாக இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டார்.

மரணத்திற்கான காரணம்

சமகால அரசாங்கத்தில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்கள் இலக்கு வைக்கப்படுவது இதன்மூலம் தெளிவாகிறது.

அரசியல் நிலைப்பாடு டானின் மரணத்திற்கு வழிவகுத்ததா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் கொலைகள் அதிகரித்து வருவதாகவும், பிரேமதாச ஆட்சியில் எதிரிகளை அமைதிப்படுத்த குற்றவாளிகள் பயன்படுத்தப்பட்டது போல, தற்போதைய அரசாங்கமும் அதே முறையைப் பின்பற்றுவதாக மனோஜ் கமகே குற்றஞ்சாட்டினார்.

நேர்மையான மனிதர்

டான் பிரியசாத் குற்றச்செயல்களில் ஈடுபடாத நேர்மையான மனிதர் என மொட்டு கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைக்கு அதிகாரிகள் முழுப் பொறுப்பேற்கு, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கமகே கோரிக்கை விடுத்தார்.

NO COMMENTS

Exit mobile version