சூரி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி.
வெண்ணிலா கபடி குழு திரைப்படம் எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்ததோ, அது போன்று விடுதலை திரைப்படம் அவரை ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் நிலை நிறுத்தியது.
அதன்பின், இவர் நடித்த கருடன் மற்றும் கொட்டகாளி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.
மேக்கிங் வீடியோ
இப்படம் மே 16 – ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Source: https://cineulagam.com/article/actor-soori-movie-making-video-goes-viral-1745408869
