Home இலங்கை அரசியல் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை துரித கதியில் நடத்துமாறு அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றின் இந்த தீர்ப்பு குறித்து அடுத்த வாரம் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

வளப்பற்றாக்குறை

எவ்வாறெனினும், ஜனாதிபதி மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளப்பற்றாக்குறையினால் இவ்வாறு இரண்டு தேர்தல்களை நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version