Home இலங்கை சமூகம் மொஹமட் இல்லியாஸிற்கு பதிலாக மற்றுமொருவர் : வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

மொஹமட் இல்லியாஸிற்கு பதிலாக மற்றுமொருவர் : வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த மொஹமட் இல்லியாஸ் காலமானதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக வேறும் ஒருவரை போட்டியிடச்செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

மொஹமட் இல்லியாஸ் மரணமானார் என்பதை உறுதி செய்யும் வகையில் மரண சான்றிதழை சமர்ப்பித்து வேறும் ஓர் வேட்பாளரை போட்டியிடச் செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் கால அவகாசம்

அமரர் இல்லியாஸின் சார்பில் வேட்பு மனுவில் கையொப்பிட்ட நபரினால் வேறும் ஒரு வேட்பாளரை பெயரிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிலீடாக வேறும் வேட்பாளரை பெயரிடுவதற்கு மூன்று நாள் கால அவகாசம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் வாக்குச் சீட்டில் அமரரின் இல்லியாஸின் பெயரும் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அதில் மாற்றமிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மொஹமட் இல்லியாஸ் நேற்று முன்தினம் மாரடைப்பினால் காலமானார். 

NO COMMENTS

Exit mobile version