Home இலங்கை அரசியல் ரவூப் ஹக்கீமின் பிரசார கூட்டத்தில் கூச்சலிட்ட இளைஞர்கள்! பேசுபொருளாகியுள்ள காணொளி

ரவூப் ஹக்கீமின் பிரசார கூட்டத்தில் கூச்சலிட்ட இளைஞர்கள்! பேசுபொருளாகியுள்ள காணொளி

0

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்(Rauff hakeem)பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது சில இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அக்குறணையில் நேற்று(23.08.2024) நடந்த கூட்டத்தில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த பிரசார கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது இடை நடுவே குறுக்கிட்டு இளைஞர்கள் கூச்சலிட்ட காணொளியானது சமூக ஊடகங்களில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் 

இதேவேளை, முன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் (Sarath Fonseka) முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் போது ஐந்து பேர் கூட வருகை தரவில்லை என தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் கூட்டத்தை 5 பேர் மட்டுமே நின்ற நிலையில் அவர்களும் பார்த்து விட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறான விடயங்கள் தற்போது பேசுபொருளாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version