யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு கடற்பரப்பில் பெருந்தொகையான கஞ்சாவுடனும் 04சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(29) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர்
வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணை
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 150 கிலோக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யபட்டவர்கள் மற்றும் கஞ்சா என்பன நெடுந்தீவு பொலிசாரிடம்
கையளிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை ஊர்காவற்றுறை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
