Home இலங்கை குற்றம் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

0

யாழ். (Jaffna) கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டதன் குற்றச்சாட்டில் நான்கு இந்திய (India)  கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (17.06.2024) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒரு படகில் இருந்த நான்கு இந்திய கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலை 

இந்நிலையில், கைதானவர்கள் மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

அதேவேளை, அவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/4-fishermen-arrested-by-srilankan-navy-in-jaffna-1718695211

NO COMMENTS

Exit mobile version