Home இலங்கை சமூகம் நான்கு வயது சிறுமி சடலாமாக மீட்பு: கொட்டகலையில் அதிர்ச்சி சம்பவம்

நான்கு வயது சிறுமி சடலாமாக மீட்பு: கொட்டகலையில் அதிர்ச்சி சம்பவம்

0

கொட்டகலையில் (Kotagala) ஆறு ஒன்றில் இருந்து
நான்கு வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் திம்புள்ள பத்தனை காவல் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர்
ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்லவிருந்த நிலையில் தனது மகளை தயார் நிலையில்
வைத்து விட்டு சிறுமியின் தாய் தயாராகி கொண்டிருந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணை

இதன்போது, குறித்த நான்கு
வயது சிறுமி வீட்டின் அருமையில் இருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில்
அடித்து சென்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம்
தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து
தேடும் பணியில் ஈடுபட்ட போது சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர்
நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமி சடலமாக மீடகப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் கொட்டகலை பிரதேச
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சிறுமி 

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தை சேர்ந்த நான்கு
வயதுடைய கிரேக்சிக்கா நெகோமி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிறுமியின் சடலம்
சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது.

NO COMMENTS

Exit mobile version