Home இலங்கை சமூகம் செட்டிகுளம் – ராமையன்குளம் பகுதியில் 40 ஏக்கர் வயல் காணிகள் பாதிப்பு

செட்டிகுளம் – ராமையன்குளம் பகுதியில் 40 ஏக்கர் வயல் காணிகள் பாதிப்பு

0

வவுனியா மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக செட்டிக்குளம்,
ஆண்டியாபுளியங்குளம், ராமையன்குளம் பகுதியில் சுமார் 40 ஏக்கர் வயல் காணிகள்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக வவுனியா பாவற்குளம் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள
நிலையில் அந்த நீர் வழிந்தோடும் பகுதியின் கீழுள்ள வயல் நிலங்களே இவ்வாறு
பாதிப்படைந்துள்ளன.

நெற்பயிர்கள் அழிவு

அத்தோடு, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் முற்றாக
பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வெள்ள நீர் தொடர்ச்சியாக பயிர்களுக்கு மேலாக மூடி பாய்ந்து வருவதாகவும் இதனால்
தமது விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரம்
கேள்விக்குறியாகியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version