Home இலங்கை சமூகம் 2ம் சங்கிலியனின் 406 ஆவது நினைவு தினம் : யாழில் அனுஷ்டிப்பு

2ம் சங்கிலியனின் 406 ஆவது நினைவு தினம் : யாழில் அனுஷ்டிப்பு

0

யாழ்ப்பாணத்தை (Jaffna) ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் நினைவு கூறப்பட்டுள்ளது.

சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்றைய தினம் (20.05.2025) இடம்பெற்றது.

சங்கிலிய மன்னன் 

இதன்போது யாழ். பருத்தித்துறை வீதி செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலிய மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் ஒர் அங்கமாக 2ம் சங்கிலிய மன்னனின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சிவசேனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ சுந்தரேஸ்வரக் குருக்கள், இந்திய துணைத் தூதரக அதிகாரி நாகராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், மதத்தலைவர்கள், வர்த்தகர்கள்,
பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version