காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
ஆயுதக்குழு
இதையடுத்து, ஹமாஸ் (Hamas) ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றது.
அத்தோடு, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ள நிலையில், இதில் 25 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணய கைதி
இதனுடன், பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்தநிலையில், காசா முனையில் இன்று (06) இஸ்ரேல் தரைவழி, வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 41 பேர் உயிரிழந்ததுடன் இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
