Home ஏனையவை வாழ்க்கைமுறை இரு நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதி! அறுவர் மரணம்

இரு நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதி! அறுவர் மரணம்

0

பண்டிகை காலத்தில் ஏற்பட்ட பல்வேறு விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த 412 பேரும் கடந்த 13 மற்றும் 14ஆம் ஆகிய திகதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார். 

அறுவர் மரணம் 

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 412 பேரில் அறுவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை,  குறித்த நோயாளர்களுள் 80 பேர் பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும்,  இவ்வருட பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளால் ஏற்படும் காயங்கள் காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக குறைந்துள்ளதாகவும், இது ஒரு சிறந்த சூழ்நிலை மற்றும் மேலும் கவனமாக இருந்தால், இந்த ஆபத்து நிலைகளை வெகுவாக குறைக்க முடியும் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version