Home இலங்கை குற்றம் இவ்வருடம் இதுவரை 43 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்!

இவ்வருடம் இதுவரை 43 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்!

0

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 8 ஆம் திகதி
வரையான காலப் பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43 துப்பாக்கிச் சூட்டுச்
சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் கைது

அதன்படி, 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன்
23 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 94 சந்தேகநபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலிஸ்
தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version