சமீபத்தில் கரந்தெனியவில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக 43 வயதுடைய ஒருவர் தேடப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கெபெல்லகொட பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரு பெண்ணும் அவரது மகனும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது..
சம்பவத்தில் கரந்தெனியவைச் சேர்ந்த 74 வயதுடைய ஒரு பெண்ணும் 25 வயதுடைய ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர்.
விசாரணை
இந்த நிலையில், கொலை சந்தேகநபராக அயல் வீட்டில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவர் மீது காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, சந்தேக நபரைக் கைது செய்ய கரந்தெனிய காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
