Home இலங்கை சமூகம் பெருந்தோட்ட மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி !

பெருந்தோட்ட மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி !

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்கென இவ்வருடத்திற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் (Sundaralingam Pradeep) தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சில்  அரசாங்கத்தினால் குத்தகைக்கு விடப்பட்டுள்ள பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை குறிப்ட்டுள்ளார்.

இதன்பேது, கடந்த காலங்களில் தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் தங்களது அரசியல் நட்பு வட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்டது என இவர் சுட்டிக்காட்டினார்.

தோட்ட பகுதியை சேர்ந்த மக்கள்

ஆகவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இப் புதிய வீடுகள் தோட்ட புறங்களில் வாழும் உரிய பயனாளிகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் குடிசன புள்ளி விபர மதிப்பீடுகளுக்கு அமைய 83.75% மானோர் இலங்கையில் சொந்த குடியிருப்புக்களில் வாழ்ந்து வருவதோடு அவற்றில் 5.6% மானோர் தோட்ட பகுதியை சேர்ந்த மக்கள் எனவும் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில் தோட்ட புறங்களில் வாழும் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கான வீட்டு பிரச்சினைக்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 10,000 இந்திய உதவி வீட்டுத் திட்டத்தின் கீழ் 1,300 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 ஆண்டு முடிவதற்குள் 4,350 வீடுகளும், 2026 ஆம் ஆண்டில் மேலும் 4,350 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவ் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version