Home இலங்கை சமூகம் வவுனியாவில் மாரடைப்பால் 45 பேர் மரணம்

வவுனியாவில் மாரடைப்பால் 45 பேர் மரணம்

0

வவுனியா பொது வைத்தியசாலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

மாரடைப்பால் இறந்தவர்கள் தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் மாரடைப்பு

இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களில் ஒருவரும் 40 தொடக்கம்
60 வயது வரையானவர்களில் 13 பேரும் 60 தொடக்கம் 100 வயது வரையானவர்களில் 31
பேருமாக 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

அண்மைக்காலமாக வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் தொகை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version