Home இலங்கை 48 மணி நேர வெள்ள எச்சரிக்கை: களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை: களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

0
image

நிலவும் சீரற்ற வானிலை காரணமாகக் களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

​இந்த அறிவித்தல் அடுத்த 48 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த அறிவித்தல் 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

​ இதனிடையே, அப்பகுதிகள் ஊடான உப வீதிகளில் பயணிக்கும் சாரதிகளும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில், உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே கோரளை, கங்க இஹல கோரளை, கங்கவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ மற்றும் பஹத்ததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/48-hour-flood-warning-notice-for-the-people-near-kalani-and-mahavali-shores-1785751404

NO COMMENTS

Exit mobile version