Home இலங்கை குற்றம் கொழும்பபில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது

கொழும்பபில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது

0

கொழும்பு(Colombo) – முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின்
கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது.

இந்து அடிப்படைவாதிகளுக்கு வன்னியில் சைவ பக்தர்களால் எதிர்ப்பு

பொலிஸ் விசாரணை

இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும்
அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இஸ்ரேலின் இலக்கில் தகர்க்கப்பட்ட அமெரிக்க நிறுவனம்: கடும் சீற்றத்தில் பைடன்

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறப் போகின்றது: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   

NO COMMENTS

Exit mobile version