Home உலகம் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

0

ஜப்பானின் (japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது ஜப்பானின் தொலைதூர இசு தீவுகளுக்கு அருகே இன்று (24.9.2024) காலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலநடுக்கமானது 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

மக்கள் மிகுந்த அச்சம்

இதனையடுத்து, இசு தீவுகள் மற்றும் ஒகசவாரா தீவுகளை சுனாமி தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தீவில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Source: https://ibctamil.com/article/5-6-richter-earthquake-hits-japan-tsunami-warning-1727159522

NO COMMENTS

Exit mobile version