Home உலகம் இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து தகவல்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து தகவல்

0

இந்தோனேசியாவின் (Indonesia) வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் வெளியிட்டுள்ளது

அந்நாட்டு நேரப்படி இன்று (13.6.2024) அதி.காலை 12:01 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபரின் சொந்த ஊரை இலக்கு வைத்த ரஷ்யா : பலர் பலி

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை

தலாட் தீவுகளின் வடமேற்கே 41 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் 32 கிலோமீற்றல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி (Tsunami) எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான இஞ்சி இந்தியாவில் பறிமுதல்

வெளிநாடொன்றில் பற்றி எரியும் வனப்பகுதி: அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version