Home இலங்கை குற்றம் கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

0

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக மிஹிந்தலை, சியம்பலாகஸ்வெ வ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் ஒருவர் காயமடைந்திருந்தார்.

மேலதிக விசாரணை

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/5-arrested-in-connection-with-kalkulam-gun-shoot-1751103929

NO COMMENTS

Exit mobile version