வெலிகமை நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம்(28) வெலிகமை நகர சபையின் தவிசாளர் தெரிவிற்கான வாக்கெடுப்பிற்காக வருகை தந்து கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நகர்மன்ற உறுப்பினர்கள் இருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தனர்.
தீவிர விசாரணை
அஜித் பிரியந்த மற்றும் கமனி மாலா அல்விஸ் ஆகிய குறித்த நகர்மன்ற உறுப்பினர்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி இடைமறிக்கப்பட்டு, டபள் கெப் வாகனமொன்றில் கடத்தப்பட்டு, பின்னர் அவர்களின் தொலைபேசிகள் பறிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டதாக குறித்த இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போது சம்பவம் குறித்து வெலிகம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
