Home உலகம் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த 5 புதிய நாடுகள் : இந்தியா வரவேற்பு

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த 5 புதிய நாடுகள் : இந்தியா வரவேற்பு

0

பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் எகிப்து (Egypt), எத்தியோப்பியா(Ethiopia), ஈரான்(Iran), சவூதி அரேபியா(Saudi Arabia), ஐக்கிய அரபு அமீரகம்(United Arab Emirates) ஆகிய 5 நாடுகள் புதிதாக இணைந்துள்ளன.

பிரிக்ஸ் அமைப்பில் எகிப்து, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை புதிய உறுப்பினர்களாக சேர்த்ததை இந்தியா (India) மனமகிழ்ந்து வரவேற்றுள்ளது.

ரரஷ்யாவில் (Russia) சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் குறித்த 5 நாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் மில்லியன் கணக்கான டொலர்

பொருளாதார வளா்ச்சி

2010 செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவை உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு ‘பிரிக்ஸ்’ என மறுபெயரிடப்பட்டது.

உலகப் பொருளாதார வளா்ச்சியின் முக்கிய இயந்திரமாக இருந்துவரும் பிரேஸில்(Brazil) , ரஷ்யா, இந்தியா, சீனா (China) மற்றும் தென்னாபிரிக்கா (South Africa) ஆகிய 5 நாடுகளுடன் 25 சதவீத உலகப் பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னாட்டு கூட்டமைப்பாக பிரிக்ஸ் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் , பிரிக்ஸ் விரிவாக்கத்தில் இணைந்த நாடுகளை இந்தியா வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய உறுப்பினர்களின் வருகையால், புவியியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்பட்ட உறுப்பினர் ஆதரவை கொண்ட பிரிக்ஸ், உலக அரசியல் மற்றும் பொருளாதார கூட்டாண்மை உறவுகளை மறுசீரமைக்கும் திறன் பெறுகிறது என இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

2005இல் விடுதலைப் புலிகள் எடுத்த தீர்மானம்! இரகசிய ஒப்பந்தத்திற்கு தயாராகும் தமிழ் தரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version